ஊனம்

26 Apr 2021 Admin

எனது இயந்திர வாழ்க்கையின் நடைமுறையில் நான் கண்ட மிகப் பெரிய உண்மை, தேவைகள் யாருக்கான தேவை? யாருக்காக வாழ்கிறோம்? நம் சரியும், தவறும் நாளொன்றிற்கு வேறொருவர் தீர்மானிக்க தெய்வம் துணை நிற்கிறதா

தினமும்அனைவரும் சமம்என்று சொல்லும் நாம் ஒரு போதும் சமமாக யாரையும் நாம் பார்ப்பதில்லையே, இதில் தெய்வமும் விதி விலக்கல்ல! பிரிவினை தெய்வத்திற்கும் உண்டு என்பதே நிதர்சன உண்மை

மதங்கள் காக்கும் தெய்வம் ஏன் மனிதனை காக்கவில்லை

மரணம் யாருக்கும் விதி விலக்கல்ல, தெய்வம் மனிதனாக பிறந்தாலும் மரணித்தாகவேண்டும். இந்த குறுகிய வாழ்க்கையில், நான் என்ற அகம்பாவம்! ஆணவம்! நம் முன்னோர்! நம் பரம்பரை! நம் திமிர்! இவை அனைத்தும் நம்மை உண்மையில் இருந்து பிரிக்கின்றது!! 

உண்மை என்ன? நாம் பிரிக்கப்பட்டோம்! யாரால் பிரிக்கப்பட்டோம்? யார் நம்மை பிரித்தார்கள்? ஏன் பிரித்தார்கள்? வெறும் பணத்திற்காகவா? இல்லை!!!

ஒருவர் முன்னிலை வகிக்க பலர் அடிமைப்பட வேண்டியுள்ளது! மீன்களால் தலைமை இல்லாமல் இன்றும் நீரில் குழுக்களாக வாழ முடிகின்றது! தலைமை இல்லாமல் ஆறறிவுகொண்ட மனிதனால் வாழ முடிவதில்லை, ஆறறிவின் பலன்! பகிர்ந்து உண்ணுதல் காக்கையின் பழக்கம்! அப்பேற்பட்ட காக்கையின் நல்ல குணத்தை, நாம் ஒரு முறை கூடபுகழ்ந்ததில்லை, மாறாக காக்கா என்பது குறுகிய கேவல பெயர் வழக்கானது!!

என்று முடியும் இந்தப் பிரிவினை? ஜாதி, மொழி, மதம், நாடு, தேசம், நிறம், இன்னும் எண்ணற்றப் பிரிவினைகள்

போட்டி எதற்காக? திறமையை வெளிக்கொண்டு வர ஒர் உந்துகோல் அவ்வளவே! இன்றோ அதுவே ஒருவாழ்க்கையாய் இருக்கின்றதே!

திறமை எல்லாருக்கும் உள்ளது, அவரவர் திறன் அவரவருக்கு மேலானது! சிலர் திறனை மட்டும் மேலோங்கச்செய்வது, உடலில் கைகளை மட்டும் வளரச்செய்வதற்கு சமம். இது வளர்ச்சி அல்ல இது ஊனம்

நாம் அனைவரும் மனதளவில் ஊனமுற்றவர்களே!!

ஊனமற்ற தலைவனும் இல்லை! ஊனமற்ற தொண்டனும் இல்லை! ஊனத்தை விதைத்து வளர்க்கும் நாம், ஊனத்தை அழிக்க போராடுகின்றோம், வேடிக்கை!

- சிவராஜ் பரமேஸ்வரன்