சிகப்பு ரோஜா இரண்டாம் அத்தியாயம்

22 Jul 2021 Adminஆட்டோ லீலா பேலஸ் ஹோட்டல் உள்ளே நுழைய, செக்யூரிட்டி பாலன் ஆட்டோவை தடுத்து நிறுத்தி பாதுகாப்பு சோதனை செய்கின்றார். ரகுலன் மயங்கி கிடப்பதை பார்த்து அருகில் வர, சாராய வாடை வீச ரகுலன் குடித்து மயங்கி கிடக்கின்றான் என்று நினைத்து ஆட்டோவை உள்ளே அனுப்புகின்றார். 

திவ்யா ஹோட்டல் வரவேற்பில் தனக்கும் தனது கணவருக்கும் ரூம் வேண்டும் என்று வரவேற்பில் பணிபுரியும் பெண் ஒருவரிடம் கேட்கின்றாள். ரகுலன் வரவேற்பில் உள்ள சோபாவில் தலை தொங்க மயங்கியபடி சோபாவில் அமர்த்தப்பட்டிருந்தான். அவனிடமிருந்து வீசும் சாராய வாடை, கடந்து செல்வோரை திரும்பி பார்க்க வைத்தது. திவ்யா வேகமாக ஐடி கார்டு கொடுத்து ரூம் புக்கிங்ஐ துரித படுத்துமாறு வரவேற்பில் உள்ள பெண்ணிடம் கூறினாள். 

ரூம் பாய் சாவியுடன் வந்து பெட்டியை எடுத்துக் கொண்டான். அரை மயக்கத்தில் இருந்த ரகுலனை திவ்யா தோளில் தாங்கி லிப்ட்டிற்கு கொண்டு சென்றாள். ரூமிற்க்கு வந்தவுடன் ரகுலன் படுக்கையில் படுக்க வைக்கப்படுகின்றான். கூட வந்த ரூம் பாய்க்கு 200 ரூபாய் டிப்ஸ் ஆக கொடுக்கின்றாள். மேலும் 2000 ரூபாய் கொடுத்து சில பொருட்கள் வாங்க வேண்டும் என்று கூறி கட கட வென ஒரு பேப்பரில் எழுதி இதை மெடிக்கலில் வாங்கி வருமாறு ரூம் பாயிடம் கூறினாள். தயங்கி நின்ற ரூம் பாய்க்கு மேலும் 500 ரூபாய் கொடுக்க, ஒரு சலாம் அடித்து சந்தோஷமாக வாங்கி வருவதாக கூறி சென்றான். ரூம் கதவு மெதுவாக சாத்தப்பட்டது.  

மிருதுளா டிஜியிடம் பேசி முடித்து வெளியே வரும்பொழுது ரகுலன் போனிற்கு திரும்பவும் அழைக்கிறாள், போன் சுவிட்ச் ஆப் என்று மறுபடியும் வர பதற்றமாகின்றாள். நேரே ஐடீ டீம் அறைக்கு செல்கின்றாள். அங்கு வெளியே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் செல்வத்தை அழைத்து விவரத்தை சொல்கின்றாள். செல்வம் ரகுலனின் போனை ட்ராக் செய்து கால்மணிநேரத்தில் தகவல் சொல்வதாக கூறி சர்வர் ரூமிற்கு செல்கின்றான். மிருதுளா, வீட்டிற்கு போன் செய்து ரகுலன் அங்கு வந்தானா என்று வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் விசாரிக்கின்றாள். அவள் ரகுலன் அங்கு வரவில்லை என்று கூற, ரகுலன் அம்மாவிற்கு போன் செய்கின்றாள். அங்கும் வரவில்லை என்று கூற மிருதுளா கவலை அடைகின்றாள். போலீஸ் வேலையில் தன்னை காயப்படுத்த யாரேனும் செய்த வேலையா இருக்குமோ என்று நினைத்துக்கொண்டிருக்க, இன்ஸ்பெக்டர் செல்வம் நேரே வந்து "மேடம் ஒரு நிமிஷம் இதை கொஞ்சம் பாருங்க?" என்று கேட்க மிருதுளா செல்வத்தை பின் தொடர்ந்து சர்வர் ரூமிற்க்கு செல்கின்றாள். 

ரூம் பாய் கொண்டுவந்த கவரை திவ்யாவிடம் கொடுக்க, கவரில் எல்லாம் சரியாக உள்ளதா என்று மருந்துகளை தனி தனியே பிரித்து  சரி பார்க்கின்றாள்.  பின்னர் கவரில் தான் வாங்கி வர சொன்ன கயிற்றால் முதலில் ரகுலனை கட்டிலோடு சேர்த்து கட்டுகின்றாள். கட்டிமுடித்தபின் ஒவ்வொரு மருந்தாக எடுத்து மற்ற மருந்துகளோடு கலக்குகின்றாள். ரகுலனுக்கு விழிப்பு வருகின்றது முனகிக்கொண்டு எழ முயற்சி செய்கின்றான். அவனது கை கால்கள் கட்டிலோடு கட்டப்பட்டதால் தடுமாறுகின்றான். முனகிக்கொண்டு திவ்யாவை அவன் பார்க்க அவள் அவன் கண்களுக்கு மங்கலாக தெரிகின்றாள். கொஞ்சம் கொஞ்சமாக தெளிய திவ்யா தெளிவாக தெரிகின்றாள். அவள் கையில் ஊசியுடன் அருகில் வந்து "குட் ஈவினிங் ராகுலன்" என்று சிரித்து கூற ரகுலன் பதற்றமாகி "என்ன பண்றீங்க? எதுக்கு இப்படி கட்டி போட்டு இருக்கீங்க?" என்று கேட்க "ஐ லவ் யு ரகுலன்! நான் உங்கள விரும்புறேன்! அத உங்க கிட்ட சொல்லத்தான் இங்க  கூப்பிட்டு வந்திருக்கேன்" அவள் சொல்வதை கேட்டு ரகுலன் சுற்றும் முற்றும் பார்க்க இது ஒரு ஹோட்டல் அறை என்பது புரிந்தது "எனக்கு கல்யாணம் ஆச்சு, நான் ஒரு...வெட்டி பையன்...மேடம்...இது வரைக்கும் பத்து காசு கூட சம்பாதிக்கல! அப்பா அம்மா பொண்டாட்டி காசுல தான் காலத்தை ஓட்டிட்டு இருக்கேன்! என்னை கடத்தி வந்ததுல உங்களுக்கு பத்து காசு பிரயோஜனம் கிடைக்காது! என்னை விட்டுடுங்க! நான் அப்படியே போய்டுவேன்! நான் யார்கிட்டேயும் உங்கள பத்தி சொல்லமாட்டேன் மேடம்" என்று ரகுலன் படபடப்போடு சொல்ல திவ்யா அதை கண்டு சிரிக்கின்றாள், சிரித்துக்கொண்டே "ரகுலன் நான் உங்கள சீரியஸ்ஸா காதலிக்குறேன்!  அண்ட் கால் மீ திவ்யா! ஓகே!! ரகுலன் எனக்கு ஒன்னு புடிச்சுப்போச்சுன்னா அது எனக்கு கண்டிப்பா வேணும் ரகுலன்! அப்படி கிடைக்கலேன்னா எனக்கு பயங்கர கோபம் வரும் அப்பரும் அது யாருக்கும் கிடைக்க கூடாதுன்னு ஒரு வெறி வரும்! இப்போ  எனக்கு உங்கள புடிச்சு போச்சு! அப்போ எனக்கு உங்கள வேணும் அவ்வளவுதான் வெரி சிம்பிள் மேட்டர். உங்களுக்கு கல்யாணம் ஆச்சு ஆகலேன்னுன்றதெல்லாம் எனக்கு கவலை இல்லை" என்று சொல்லிக் கொண்டே ஊசியை குத்த ரகுலன் அருகில் வர, ரகுலன் உரக்க "ஹெல்ப் ஹெல்ப், யாராவது காப்பாத்துங்க, ஹெல்ப் ஹெல்ப் ஹெல்ப், காப்பாத்துங்க" என்று கத்துகின்றான். கையை மடக்கி கட்டிக்கொண்டு ரகுலனை பொறுமையாக பார்த்து திவ்யா நின்றாள். "கத்தியாச்சா? இப்போ ஊசி போடலாமா? நீங்க எவ்வளவு கத்தினாலும் யாருக்கும் கேக்காது! நாம இருக்குறது சவுண்ட் புரூப் ரூம்! சோ நோ டிஸ்டருபன்ஸ்! இப்போ நீங்க நல்ல தூங்குங்க ரகுலன்! எனக்கு நிறைய வேலை இருக்கு..." என்று கூறிக்கொண்டே அவள் ஊசியை குத்துகின்றாள். கொஞ்ச நேரத்திலே ரகுலன் பேச்சு குழைந்து நினைவை இழக்கின்றான். திவ்யா ரகுலன் உதட்டில் ஒரு முத்தம் வைத்து அவனது ஆடைகளை கலைகின்றாள். கூடவே தனது ஆடைகளையும் கலைகின்றாள். அவள் குத்திய மருந்தில் ரகுலனின் நினைவுகள் மட்டும் மழுங்கியதே தவிர அவனது உணர்ச்சிகள் மழுங்கவில்லை. திவ்யாவின் நிர்வாண ஸ்பரிசம் பட்டவுடன் அவனது உணர்வுகள் உயிர் கொண்டது, ரகுலனை வருடியபடி "இனிமே நீ எனக்கு மட்டும் தான் நான் உனக்கு மட்டும் தான்! காமம் இல்லா காதல் காதலே இல்லையே! ல ல லா லா ல லா!" என்று பாடிக்கொண்டே திவ்யா ரகுலனை அணைத்து முத்தமிட்டுபடி படுக்க, அவள் பின்னங் கையால் கை தட்ட ரூமின் விளக்குகள் நொடியில் அணைகின்றது. ஜன்னல்கள் தானாகவே ஷட்டர் கொண்டு மூடுகின்றது மொத்த அறையும் பொறுமையாக இருட்டாகின்றது.   

மிருதுளா சர்வர் ரூம் டிவியில் ரகுலனின் சிம் டவர் ட்ராப் ஆவதும் பிறகு சென்ட்ரல் மெட்ரோ ஸ்டேஷனில் ட்ராப் ஆவதையும் காண்கின்றாள். அப்பொழுது சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தின் சிசிடிவி விடியோவை பார்க்க ஒரு சிகப்பு ரோஜா மாஸ்க் அணிந்த பெண் ஒருத்தி ரகுலனை தோள் மீது வைத்து நடந்து செல்வதை காண்கின்றாள். ரகுலன் நினைவில் இல்லை என்பது அவனது நடையில் தெளிவாக தெரிந்தது. திரும்பவும் விடியோவை ரீபிலே செய்ய மிருதுளா சொல்கின்றாள், இம்முறை கொஞ்சம் ஜூம் செய்து காட்ட சொல்கின்றாள். செல்வம் அந்த விடியோவை கொஞ்சம் ஜூம் செய்து மெதுவாக நகரும் படி பிலே செய்கின்றார். இம்முறை விடியோவை பொறுமையாக பார்த்த பொழுது ரோஜா பூ மாஸ்க் அணிந்த அந்த பெண் சிசிடிவியை பார்த்து, ரகுலன் தோள் மீது வைத்து கையால் நடுவிரலை காமெராவிற்கு காட்டி சிரிப்பது தெளிவாக தெரிந்தது. இதைக் கண்டு மிருதுளா நிலைகுலைந்து நாற்காலியில் சாய்கின்றாள். செய்வதறியாது குழம்பி போய் உட்கார்ந்திருக்கின்றாள். கண்ணின் ஓரத்தில் கண்ணீர் கசிந்தது, அதை துடைத்துக் கொண்டு பழைய திமிரோடு மிருதுளா எழுந்து செல்வத்திடம் "சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு இன்போர்ம் பண்ணிடுங்க! அங்க போய் விசாரிச்சு உடனே இன்போர்ம் பண்ண சொல்லுங்க! கார்ல போனாங்களா? ஆட்டோ வா? இல்ல பஸ்ஸா? எதுல போனாங்கன்னு பக்கத்துல இருக்குற சிசிடிவி புட்டேஜை செக் பண்ணி அப்டேட் பண்ண சொல்லுங்க! ரகுலன் போட்டோவை எல்லாருக்கும் அனுப்பிடுங்க! எனக்கு அந்த ட்ரைன் உள்ள இருக்குற புட்டேஜ் வேணும், ஒரு மணி நேரத்துல வேணும் செல்வம். மேக் இட் குயிக்!!" என்று பட பட வென சொல்லி மிருதுளா வெளியேற செல்வம் ஆச்சரியமாக பார்க்கின்றார். 

12 ஆவது மாடியின் ஜன்னலின் திரையை விலக்கி நிர்வாணமாய் சூரியனின் அஸ்தமனத்தை பார்த்து சிரித்துக்கொண்டு  "மிருதுளா இனி சூர்யா தேவன் எனக்கு மட்டும் தான் சொந்தம்!" 

தொடரும்...

இந்த பொய் கதையை எழுதியது,
சிவராஜ் பரமேஸ்வரன்.