குப்பை நிலா

11 May 2021 Admin

உச்சியில் நின்றுகொண்டு கீழே எறும்பு போல் ஊறும் மனிதர்களையும், இரும்பு வாகனங்களையும் காணத்தான் என்ன ஆனந்தமோ தெரியவில்லை. அந்த உச்சத்தில் வரும் காற்றிற்கு கூட ஒரு தனி குளுமையும் நறுமணமும் உண்டு! தூய்மையானா சுவாசம் அதை என்றென்றும் அனுபவிப்பது என்பது மற்றவர்களுக்கு ஒரு கனவு! எனக்கோ அது தான் வாழ்வு! 

நீல ஆகாசம்! பச்சை கடல்! சிவந்த பூமி! இந்த மூன்றையும் நான் தினம் தினம் பார்த்துப்பார்த்து அலுத்தாகிவிட்டது. பல கண்டங்களுயும் கண்டாகிவிட்டன, பல மனிதர்களும் உயிரனங்களும் பார்த்தாகிவிட்டன! பல மனித கடவுள்களையும் பார்த்துவிட்டேன். பற்பல அவதார புருஷர்களையும் புருஷிகளையும் பார்த்துவிட்டேன்! ஆனால் இன்னும் ஒரு முறை கூட உண்மையான கடவுளை காணமுடியவில்லையே என்ற ஏக்கம் எனக்குள் இருந்துகொண்டே இருக்கின்றது. 

தினம் தினம் என்னை பார்த்து நிலா சோறு ஊட்டும் அண்ணைகளையும் குழந்தைகளையும் பார்க்கும் பொழுது எனக்குள் ஒரு ஆனந்தம் வரும். எனக்கு இந்த கொடுப்பினை இல்லையே என்று ஏங்கிய நாட்களும் உண்டு. கடவுள் பாரபட்சம் காட்டிவிட்டார் நேரில் சந்திக்கும் பொழுது கேட்க வேண்டும் என்றுறிருந்தேன் "ஏன்னப்பா கடவுளே, ஏன் பூவுலகிற்கு மட்டும் அன்புள்ள மக்களை கொடுத்தாய், எனக்கு ஏன் நீ ஒருவரையும் தரவில்லை" என்று கேக்கலாம் என்றுறிருந்தேன். இன்றைய உலகை பார்க்கும் பொழுது தயை கூர்ந்து  மனதின் மட்டும் எனக்கு வேண்டாம் கடவுளே என்று கோர இருக்கின்றேன்! 

நான் பூவுலகம் தோன்றிய நாள் முதல் அவளை பார்த்துகொண்டு இருக்கின்றேன் அவள் மீது கொள்ளை காதலும் உண்டு. அவளது அழகை கண்டு ஏங்காத நாட்கள்  உண்டா!! அவ்வளவு அழகானவள் இன்றோ குப்பையாய் கருகி, தன்னை சுற்றி குப்பைகளை அறிவியல் என்ற பெயரால் நிறைத்து இந்த மனிதன் அவளை அழித்துக்கொண்டுயிருக்க நான் அவளை இந்த மனிதனிடமிருந்து எப்படி காப்பாத்துவது என்று யோசித்துக்கொண்டு இருந்தேன். 

ஆனால் காலம்போயகாலமாய் இன்று எனக்கு அழிவு காலம் வந்துவிட்டதோ என்ற பயம் வந்து விட்டது. உள்ள நல்ல நீர், நிலம், காற்றை விட்டு இங்கு வந்து எனது நிம்மதியை கெடுக்கப்பார்ப்பானேன்! குப்பை இல்லா நிலாவாய் இருந்த நான் இன்று குப்பை நிலாவாகி விட்டேன். இப்பொழுது இந்த மனிதர்களிடமிருந்து என்னை காப்பாற்றுவாயாக என்று, நான் இதுவரை காணாத காணக்கிடைக்காத பரம்பொருளாகிய கடவுளே! என்னை இந்த மனிதனிடமிருந்து காப்பாற்றுவாயாக! உனக்கு கோடிபுண்ணியம் கிடைக்கும்!

கடவுளே நீ மனிதனை மட்டும் அழித்தால் போதும் மற்ற மிருகங்களை விட்டு விடு அவர்கள் அமைதியின் வடிவமே வடிவம் அவர்களை வேண்டுமானால் எனக்கு கொடுத்துவிடு நான் நல்ல படியாய் பார்த்துக்கொள்கிறேன்!

நான் மனிதர்களுக்கு எதிரி அல்ல, ஆனால் என்று மனிதன் தன் சகமனிதனின் மரணத்தை வியபாரமாக மாற்றிவிட்டானோ இனி இந்த மனிதர்கள் வேண்டாம்! ஆதி மனிதன் உண்ண  உணவிற்கு ஆரம்பித்த இந்த  அரசியல், மதம், மொழி, நாடு இனிதே அழியட்டும், முடியட்டும் பூவுலகம் சுபிக்ஷமாகும்!! 

இப்படிக்கு,
என்றேன்றும் உங்கள்,
நிலா 

கூடவே,
சிவராஜ் பரமேஸ்வரன்